மாஸ்டர் திரைப்படம் குறித்த மேலும் ஒரு அறிவிப்பு!


மாஸ்டர் திரைப்படத்தை 1000 திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் தினத்தன்று அப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்  ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக இன்னொரு தகவல் வெளியானது.

இருப்பினும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்ற தகவலை படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் படத்தை பிரம்மாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்து அதற்காக வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.