யாழ் சங்கானையில் ஒருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இதன்போது , யாழ்.சங்கானைப் பகுதியில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி நபர் ஏற்கனவே கொரோனாத் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்ததன் காரணமாகத் தனிமைப்படுத்திலிலிருந்தவர் எனவும் அவர் கூறினார்.

இதுதவிர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.