இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட்!
இந்தியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணியில், சகலதுறை வீரரான மொய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் அபோட்டுக்கு காயம் ஏற்பட்டு அணியிலிருந்து வெளியேறியுள்ளதால், அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ரி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய 33 வயதான மொய்சஸ் ஹென்ரிக்ஸ், இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஏற்கனவே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர், புகோவ்ஸ்க்கி ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை