ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி

 


லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ளை வைகிங் அணி 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

LPL தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் ஜோன்சன் சார்லஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அவிஸ்க பெர்ணான்டோ 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதன்படி 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதற்கமைய நாளை(16) இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மற்றும் காலி கிலடியேடர்ஸ் அணிகள் மோதவுள்ளன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.