பெர்குசனின் நிதான துடுப்பாட்டத்தால் சிட்னி அணி வெற்றி!


பிக் பேஷ் ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற சிட்னி தண்டர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பான்கிராப்ட் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டேனில் சேம்ஸ், மெக் ஹென்ரிவ், சங்கா மற்றும் கட்டிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி தண்டர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெல்யும் பெர்குசன் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் ஒலீவர் டேவீஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் பெரேன்டொர்ப், ஆரோன் ஹார்டி மற்றும் பவாட் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 53 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்று போட்டியின் வெற்றிக்கு வித்திட்ட கெல்யும் பெர்குசன் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.