2022ஆம் ஆண்டு ரி-20 - தகுதிச்சுற்றுகளில் 86 அணிகள் மோதல்!
2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்கேற்க 86 அணிகள் தகுதிச்சுற்றுகளில் மோதவுள்ளன.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 இடங்களுக்கு தகுதிபெற அந்த அணிகள் யாவும் 13 மாதங்களில் 225 போட்டிகளில் விளையாடுகின்றன. 4 படிநிலைகளாக அணிகளை தேர்வு செய்யும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது.
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தகுதிபெறுவதற்காக முதல் முறையாக ஹங்கேரி, ருமேனியா, செர்பியா அணிகள் போட்டியிடுகின்றன.
அதேபோல், ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பின்லாந்து மோதவுள்ளது. அதேபோல் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி ஒன்றை ஜப்பான் முதல் முறையாக நடத்தவுள்ளது.
தகுதிச்சுற்று போட்டிகள் ஆபிரிக்கா, அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக், ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் நடைபெறும்.
இதில் ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணி தகுதிபெறும். அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் இருந்து தலா 2 அணிகள் தகுதிபெறும். ஆசியாவிலிருந்து தகுதிச்சுற்று ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் இருந்து தலா 1 அணி தேர்வாகும். இவை மொத்தமாக 8 அணிகள் கணக்காகும்.
இது தவிர, இந்தியாவில் நடைபெறும் 2021 ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் கடைசி 4 இடங்களை பிடிக்கும் அணிகள், ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதிபெற்ற நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சிம்பாப்வே ஆகிய 4 அணிகள் சேர்ந்து மேலும் 8 இடங்களுக்கு தகுதிபெறும்.
இந்த இரு 8 அணிகள் பிரிவிலிருந்து தேர்வாகும் தலா 4 அணிகள், தொடரை நடத்தும் அவுஸ்ரேலியா, 2021ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் நேரடியாகத் தகுதிபெறும் 11 அணிகள் என 16 அணிகள் 2022ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை