இறுதி ரி-20 போட்டியில் ஆஸியிடம் போராடி தோற்றது இந்தியா!


இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 80 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியிருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன்போது இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 85 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல், ஆடம்செம்பா, சீன் அபோட் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் மிட்செல் ஸ்வெப்சன் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.