தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவு!


ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு முறைகளை ஜனவரி 31ஆம் திகதி வரை நீடித்துள்ள மத்திய அரசு, தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31ஆம் திகதி வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய ஊரடங்கில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயற்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயற்பட அனுமதி உட்பட அனைத்தும் தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும் பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது போன்ற காரணங்களால், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தலாம் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.