மது அருந்திய இருவர் உயிரிழப்பு!

 


மீரிகம – கீனதெனிய பகுதியில் மதுசாரம் அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸாரினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் மீரிகம மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதான சகோதரர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

தமது தாயின் மரணச்சடங்கின் பின்னர் இவர்கள் இருவரும் மதுசாரம் அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசேட விசாரணைகளை மீரிகமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.