இரத்தினபுரியில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையத்தை நிர்மாணிக்க திட்டம்!
இரத்தினபுரி- தெமுவாவதவில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையத்தை அமைப்பதற்குத் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் நிதி முதலீட்டில் குறித்த நிலையத்தை அமைக்க அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் முதலாம் கட்டமாக இரத்தினபுரி- தெமுவாவதவில் அமைந்துள்ள 22 பேர்ச்சஸ் காணித்துண்டில் 5 மாடிகளைக் கொண்ட 17,550 சதுர அடிகளைக் கொண்ட கட்டடமொன்று, 365 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்கும், இரண்டாம் கட்டமாக அதற்கு அருகாமையில் அமைந்துள்ள காணித்துண்டை கையகப்படுத்தி 14 மாடிகளைக் கொண்ட நவீனமயமான கட்டடமொன்றை அமைப்பதற்கும் நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,குறித்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக முன்மொழியப்பட்டுள்ள கட்டடத்தை வடிவமைத்து நிர்மாணிக்கும் நிபந்தனையின் கீழ், நேரடி ஒப்பந்தமாக பொறியியல் பணிகள் தொடர்பான ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக, கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை