மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்வு!
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7 ஆயிரத்து 641 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 156 கன அடியாக வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையில் இருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து 105.12 அடியாக உயர்ந்து காணப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை