யாழில் புரெவி புயலால் இதுவரை 54ஆயிரம் பேர் பாதிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போதுவரை 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், புயல் தாக்கத்தினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 941 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 393 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 55 வீடுகள் முழுமையாகவும், இரண்டாயிரத்து 443 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துளதாக சூரியராஜா கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை