தெல்லிப்பளை வைத்தியசாலை மருத்துவர்கள் பணி பகிஸ்கரிப்பு!
5 கோரிக்கைகளை முன்வைத்து தெல்லிப்பளை வைத்தியசாலை மருத்துவர்கள் பணி பகிஸ்கரிப்பு நடத்தியுள்ளனர்.
யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலைக்குரிய மயக்க மருந்து நிபுணரை விடுவிக்கவேண்டும், பாதுகாப்பான மருத்துவ கழிவுகளை தகனம் செய்யும் முறையினை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் மயக்க மருந்து நிபுணர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில், பதிலீடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஒருவரை அனுப்புமாறு வைத்தியசாலை அத்தியட்சகர் ஊடாக கோரிக்கை விடுத்தும் தற்போது அனுப்ப முடியாது.என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாக தெல்லிப்பளை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது தமது வைத்தியசாலையில் அன்றாடம் சேவை பெற பல நோயாளர்கள் வருகைதரும் நிலையில் வெளி நோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கான என்90 முகக் கவசங்கள் போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 50க்கு மேற்பட்ட வைத்தியர்கள் கடமையாற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கொரான காலகட்டத்திலும் வைத்தியர்கள் நேர காலம் பாராது கடமையாற்றுகிறபோது தமக்குரிய மேலதிக கொடுப்பனவுகள் உரிய காலத்தில் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் வைத்தியர்கள் திரும்பிச் செல்லும் நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகிறது.எமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளரை அணுகியபோது 4 கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமென நம்பிக்கை அளித்ததோடு மயக்க மருந்து நிபுணரால் நியமிப்பது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் கூறியதாக தெல்லிப்பளை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
இதேவேளை இது தொடர்பாக தனது முக புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ள பணிப்பாளர் குறித்த உணர்வழி மருத்துவ நிபுணரை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேவிட்டால் இருதய சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் மூளை நரம்பு சத்திர சிகிச்சை கூடங்களை மூடும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்.போதனா வைத்தியசாலையை நம்பியிருக்கின்றனர். அண்மைக்காலத்தில் உணர்வழி மருத்துவ நிபுணர் உதவியுடன் 500 பேரின் உயிர்கள் சத்திர சிகிச்சை ஊடாக காப்பாற்றப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது. அதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
வெறுமனே என் மீது அவதுாறு பரப்புவதற்காக மக்களை பணயம் வைக்கவேண்டாம். எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை