சத்தார் கதாபாத்திரம் குறித்து மனம் திறக்கும் காளிதாஸ்!


சமீபத்தில் ஓடிடி தளத்தில் பாவ கதைகள் என்கிற பெயரில் நான்கு குறும்படங்களை ஒன்றிணைத்து ஆந்தாலாஜி படம் வெளியானது.

இவற்றை கவுதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் என நான்கு பேர் இயக்கியிருந்தனர். இந்த நான்கு படங்களிலும் சுதா கொங்கரா இயக்கியிருந்த தங்கம் என்கிற குறும்படம் மட்டும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இதில் பெண் தன்மை கொண்ட சத்தார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தப்படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக 45 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு சுமார் 12 கிலோ எடையை குறைத்தேன். என்னுடைய காட்சிகள் வெறும் எட்டு நாட்களிலேயே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் என் கதாபாத்திரத்தின் தாக்கம் என் மனதில் இருந்து விலக வெகு நாட்கள் ஆனது.

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்க தயங்கினேன். அதன்பின்னர் துணிந்து நடிப்போம் இரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் சினிமாவை விட்டே வெளியேறிவிடலாம் என்றுகூட நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு பாராட்டுக்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.