கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தீர்மானம்!
மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் ஆராய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான முன்மொழிவு மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் அமைச்சரவையில் நேற்று(14) முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2-3 ஆண்டுகளுக்கும் அதிகமாக தாமதமாகிவிட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை