மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!
மன்னார் பிரதேச சபையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் சபையில் முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஏற்பட்ட வாத பிரதிவாதங்களை தொடர்ந்து வரவு செலவுத் திட்டமானது வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில், ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது ஏகமனதாக வெற்றி பெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் இணைந்து வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 9 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்ததோடு, மேலும் ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவு திட்டமானது வெற்றி பெற்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை