மருமகனை துடிதுடிக்க கொன்ற மாமனார்!


இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான அனிஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரௌ பாடசாலை காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

மட்டுமின்றி, இவர்களது காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலமுறை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 90 நாட்களுக்கு முன்பு அனிஸ்-ஹரிதா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்பு ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், பாலக்காடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திருமணம் செய்துவிட்டதால் அனிசுடன்தான் செல்வேன் என ஹரிதா உறுதியாக கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிதாவின் தந்தை, உனது தாலிக்கு 90 நாள்தான் விலை என ஹரிதாவை பார்த்து மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அனிஸ் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் கணவன்- மனைவி இருவரையும் ஹரிதாவின் குடும்பத்தினர் மிரட்டியபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஸ், அவரது சகோதரர் அருண் ஆகிய இருவரையும் ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், தாய்மாமன் சுரேஷ் ஆகிய 2 பேரும் தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர்.

அருணை அடித்து விரட்டிவிட்டு அனிசை கம்பியால் தாக்கினர். மேலும் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தனர்.

காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாலக்காடு பொலிசார் வழக்குபதிந்து பிரபுகுமார் மற்றும் சுரேசை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.