கிழக்கு மாகாணத்தை புரட்டியெடுக்கும் புரவிப் புயல்!


இலங்கையில் இதுவரையாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 225 ஆக உயர்வடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேலும் 43 கொரோனா தொற்றாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 235 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றில் 68 நபர்களிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவிலில் ஒருவருமாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும், கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதிவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அக்கரைப்பற்றில் 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன். அம்பாறையில் 1361 பேரும், மட்டக்களப்பில் 5287 பேரும், திருகோணமலையில் 1249 பேரும், கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்களை மிகவும் அவதானமாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, புரெவி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள புயலானது திருகோணமலையை ஊடறுத்து செல்லவுள்ளதாகவும், இதன் காரணமாக கடலோர மக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1ம் இணைப்பு

இப்புயலின் தாக்கம் காரணமாக மூன்று நாட்களுக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த அழுத்த பகுதி திருகோணமலைக்கு தெற்கே 450 கி.மீ. துரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதனால்அடுத்த 12 மணிநேரத்தில் இது ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதுடன் வடமேற்கு நோக்கி செல்லும் என கூறப்படுகின்றது.

வளிமண்டல திணைக்களத்தின் தற்போதய தகவலின்படி சூறாவளியானது திருகோணமலை ஊடாக பிரவேசித்து வவுனியா மன்னார் ஊடாக இலங்கையை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காலப்பகுதியில்

1. தற்காலிக வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் பாதிப்படைதல்

2. மின்சார இணைப்புக்கள் பாதிப்படைதல்

3. மரங்களின் ஆபத்தான கிளைகள் முறிதல்

4. கடல்நீர் தாழ்நிலங்களுக்குள் ஊடுருவல்

5. கன மழை காரணமாக திடீர் வெள்ள நிலைமைகள் ஏற்படலாம்

எனவே மக்கள் தமது வீடுகளுக்குவெள்ள நிலைமைகள் ஏற்படலாம் அருகில் உள்ள பாதுகாப்பற்ற மரக் கிளைகளை அகற்றுவதுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.