புரேவிப் புயலின் தாக்கம் - 28 வயது இளைஞன் பலி!
யாழ். தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ்(28) என்வரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது, நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், நீரில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், அண்மையிலுள்ள மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
புரவிப் புயல் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் பெய்த கடும் மழையினால் வீதிகள், உள் ஒழுங்கைகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையிலேயே, இந்த நபரும் நீருக்குள் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை