வீடு இடிந்து விழுந்ததால் சிறுமி பலி!


சுவர் இடிந்து, உறங்கிக் கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

தெற்கு வங்க கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று கரையை கடக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

காலையிலும் பரவலாக மழை பெய்தததால் வேப்பந்தட்டை அருகேயுள்ள பசும்பலூர் கிராமத்தில் வெங்கடேசன்- திருச்சடை தம்பதியர் வசித்து வந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் தம்பதியர் தப்பிய நிலையில், அவர்களின் மகள் 7-வயது மகள் யோசனா பரிதாபகமாக உயிரிழந்தார்.

சுவர் இடிந்து, உறங்கிக் கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இடுபாடுகளிலிருந்து சிறுமியின் உடலை மீட்டு பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.

தகவலறிந்த பொலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.