புரேவி சூறாவளி திருகோணமலையை ஊடறுக்கவுள்ளது!!


 புரேவி சூறாவளி வரும் புதன்கிழமை மாலை வேளையில் மட்டக்களப்பு ஊடாக இலங்கையை ஊடறுக்கும்.

திருகோணமலையை ஊடறுத்துச் செல்ல உள்ள சூறாவளி இலங்கை வளிமண்டல திணைக்களத்தினால் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது (Low Pressure Area) தற்போது தாழமுமாக (Depression) வலுவடைந்து, திருகோணமலையில் இருந்து தென்கிழக்காக 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகிறது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வலுவான தாழமுமாக (Deep Depression) உருமாறி, அதனை அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது பின்னர் நாளை புதன்கிழமை மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கம் (Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை திருகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கு 680 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமாரியில் இருந்து கிழக்காக 1090 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்பட்டது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக (Deep Depression) ஆக வலுவடைந்து, அதனை அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) உருமாறும் என தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கரையோரத்தை முல்லைத்தீவு (கொக்கிளாய் 9.0N) இற்கும், மட்டக்களப்பு (களுவாஞ்சிக்குடி 7.5N) இற்கும் இடையில் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.