ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!


பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி  95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது.

குறித்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாக பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

எனினும், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கடந்த 21ஆம் திகதி ஆலோசனை நடத்தியது.

குறித்த ஆலோசனை கூட்டத்தில் 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று முதல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

முதல் நாடுகளாக ஜேர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 3 நாடுகளிலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

101 வயது நிரம்பிய எடித் குவாஷிலா என்ற மூதாடிக்கு ஐரோப்பிய நாடுகளில் முதல் நபராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக வயதானோருக்கும், முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.