இந்திய வீராங்கனை ஒரு கிட்னியுடன் உச்சத்தைத் தொட்டு சாதனை!

 



17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் ஒரு அதிர்ச்சி டிவிட்டை வெளியிட்டு உள்ளார். அதில் நான் உலகத் தரவரிசைப் பட்டியலில் உச்சத்தைத் தொட்டபோதெல்லாம் ஒரு கிட்னியுடன் தான் வெற்றி பெற்றேன். இதை என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்வதா அல்லது எனது பயிற்சியாளரின் திறமை என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த டிவிட்டைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


கேரளாவில் வசித்து வரும் அஞ்சு பாபி ஜார்ஜ் கடந்த 2003 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற உலகத் தடகள போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். அதையடுத்து உலகம் முழுவதும் பெயர் பெற்ற தடகள வீராங்கனையாக வலம் வந்தார். அதோடு பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தடகள போட்டிகளில் இந்தியாவிற்கு பல தங்கப் பதக்கங்களையும் வென்று கொடுத்துள்ளார். இதனால் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடத்தைப் பெற்றார்.


தற்போது கேரளாவில் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் நான் உலகத் தரவரிசைப் பட்டியலில் உச்சத்தில் இருந்த போதெல்லாம் ஒரு கிட்னியுடன் தான் வெற்றி பெற்றேன். “இதை பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அனால் நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி, வலி நிவாரணிக்கு கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள்… இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும் என்னால் உலகத் தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மயாமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறது.


இந்த டிவிட்டுக்குப் பதில் அளித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு, அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளைச் சேர்த்து உள்ளார் எனத் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் அஞ்சுவின் டிவிட்டைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.