அனுராதபுரத்தில் விபத்தில் பலியான தாயும்,மகனும்!


 அநுராதபுரம், மஹாவ பகுதியில் விபத்தை ஏற்படுத்தி, தாயையும், மகனையும் கொன்ற சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஹலபல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு (15) ஏற்பட்ட வீதி விபத்தில் 32 வயது பெண்ணும் அவரது மூன்றரை வயது மகனும் கொல்லப்பட்டதாக மஹாவ போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் அதே பகுதிய சேர்ந்த ஏ.எம். இரங்கனி (32), கே.ஏ. தனஞ்சய ஜோஹன் குருவிட்ட (மூன்றரை வயது) ஆவர். தாயும் மகனும் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனம் மோதிஉயிரிழந்தனர்.

வீதியின் ஓரமாக நடந்து வந்த தாயையும், மகனையும் வாகனம் மோதியுள்ளது. இருவரும் சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதவாச்சியிலிருந்து 11 புகையிரத திணைக்கள ஊழியர்களை ஏற்றிக் கொண்டு கொழும்புக்கு சென்று கொண்டிருந்த வாகனமே வித்திற்குள்ளானது. விபத்தையடுத்து வாகன சாரதி தப்பி ஓடிவிட்டார். நேற்று (16) காலை அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கைது செய்யப்பட்டார்.

வண்டியில் பயணித்த பத்து புகையிரத திணைக்கள ஊழியர்களும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் சாரதி குடிபோதையில் இருந்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் இறந்த பெண்ணின் கணவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய்.

முட்டை வாங்குவதற்காக அந்தப் பெண்ணும் மகனும் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்று திரும்பிச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.

விபத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கொந்தளித்தனர். வாகனத்தில் பயணித்தவர்களை கடுமையாக தாக்கினர். தாக்குதல் நடத்தப்பட்டதால் தப்பியோடியதாக சாரதி தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக அவர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை தொடர்ந்து மக்கள் வீதி மறியலில் ஈடுபட்டனர். நியாயமான விசாரணை நடைபெறுமென பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.