வவுனியாவில் தொற்றுநீக்கும் நடவடிக்கையில் படையினர்!


 வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் இன்று (29) காலை ஈடுபட்டிருந்தனர்.

புத்தாண்டு வருடம் ஒர் சில நாட்களில் வரவுள்ள இந் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராணுவம் , பொலிஸார் , விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடு்த்திருந்தனர்.

இதன்போது வவுனியா நகர வர்த்தக நிலையங்கள் , பழைய பேரூந்து நிலையம் , புதிய பேரூந்து நிலையம் , சந்தை போன்ற பகுதிகளில் தொற்று நீக்கி மருந்தும் தெளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.