யாழில் இன்று 9 பேருக்கு தொற்று!
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (30) இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தின் இன்றைய ஆய்வுகூட பரிசோதனையின் போது உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவை சேர்ந்த 8 பேர், சண்டிலிப்பாய் பிரிவை சேர்ந்த ஒருவர் என 9 பேருக்கு தொற்று உறுதியானது.
கருத்துகள் இல்லை