தீ விபத்தில் வீடொன்று நாசம்!


 நுவரெலியா – அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

நேற்று (10) இரவு 9 மணியளவில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வீடுகளில் இருந்த 7பேர், தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின்போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிறு, சிறு எரி காயங்களுக்கு உள்ளாகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.