இந்திய அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியல்!


இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற விளையாட்டுகளை காட்டிலும் மிக அதிகம். இந்தியாவிற்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி, பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களுடைய திறமைய நிரூபிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அவர்களுடைய சம்பளத்தை நிர்ணயிக்கிறது, BCCI.

இந்திய வீரர்களை, நான்கு கிரேடுகளாக பிரித்திருக்கின்றது. Bcci A ப்ளஸ் A B C என்பதாகும். A ப்ளஸ் கிரேடில் உள்ளவர்களுக்கு, வருடத்திற்கு ஏழு கோடியும், A கிரேடில் உள்ளவர்களுக்கு, வருடத்திற்கு ஐந்து கோடியும் Bகிரேடில் உள்ளவர்களுக்கு, வருடத்திற்கு மூன்று கோடியும், C கிரேடில் உள்ளவர்களுக்கு, வருடத்திற்கு ஒரு கோடியும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. A ப்ளஸ் கிரேடில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பூம்ரா இருக்கிறார்கள்.

A கிரேடில் குல்தீப் யாதவ், முகமது சமி, ரஹானே, KL ராகுல், ரவீந்திர ஜடேஜா, புவநேச குமார், ரவிச்சந்திர அஷ்வின் ரிஷபந் இவர்களுக்கு சம்பளமாக வருடத்திட்க்கு ஐந்து கோடி கொடுக்கப்படுகிறது.

B கிரேடில் உமேஷ் யாதவ், சாகா, மாயங் அகர்வால், ஹர்திக் பாண்டியா,சஹால் இவர்களுக்கு வருடத்திற்கு மூன்று கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

C கிரேட்டில் கேதர் ஜாதவ், சுந்தர். ஹனுமான் விகாரி, மனீஷ் பாண்டே, ஸ்ரேஸ் ஐயர், தீபக் சஹர், நவ்தீப் சைனி இவர்களுக்கு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகின்றது.

இது மட்டுமல்லாமல், அவர்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும், தனியாக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அவர்கள் விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும், பதினைந்து லட்சம் ரூபாயும் ஒருநாள் போட்டிக்கு ஆறு லட்சம் ரூபாயும். டி20 போட்டிக்கு மூன்று லட்சம் ரூபாயும், என தனியாக சம்பளம் கொடுக்கப்படுகின்றது. கிரேட் வாரியாக கொடுக்கப்படும் சம்பளம் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தனித்தனியாக சம்பளம் .

இது தவிர ஒருநாள் போட்டியில் அல்லது டெஸ்ட் போட்டியிலோ சதம் அடித்தால் ஐந்து லட்சம் ரூபாய் போனஸாக கொடுக்கப்படுகின்றது. ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்தால், ஐந்து லட்சம் ரூபாயும், இரட்டை சதம் பெற்றால் ஏழு லட்சம் ரூபாயும்.

இது தவிர, தரவரிசையில் முன்னணியில் இருக்கும், ஏதேனும் ஒரு அணியுடன் விளையாடும்போது அரை சதமோ, அல்லது சதமோ பெற்றால் அவர்களுக்கு முப்பது முதல் அறுபது சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.