யாழிலே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியது!
புரேவி புயலின் தாக்கத்தால் நாடு முழுவதும் பல பகுதிகளில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, யாழ்ப்பாணத்திலேயே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவானது. 245 மிமீ வரை மழை வீழ்ச்சி பதிவானது. வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் 200 மிமீக்கு மேல் பலத்த மழை பதிவாகியுள்ளது.
புரேவி புயல் மேற்கு-வட மேற்கு நோக்கி நகரும் என்றும் பிற்பகலுக்குள் மன்னார் வளைகுடாவிற்குள் நுழையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை