கொரோனா வைத்தியசாலை உணவில் அதிருப்தி!
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய பராமரிப்புகள் இல்லை என விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கொரோனா நோயாளிகள் சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
சோறும் சம்பலும், சோறும் போஞ்சியும் போன்ற உணவுகளே வழங்கப்பட்டு வருவதாக நோயாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உணவு விடயத்தில் உரிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு, தமது நெருக்கடியை தீர்க்குமாறு கொரோனா நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை