காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னாரிலும் கவனயீர்ப்பு!


 மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (30) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா,

“நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை. அவர்களை தொலைத்துவிட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக்கொண்டு வீதிகளில் நிற்கின்றோம். எனவே சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.