சுகாதார சேவைகள் பணிப்பாளராக உமாசங்கர்!


 முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் நேற்று(7) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவரை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பொறுப்பேற்கும் படி நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரனால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் நேற்றையதினம் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.