சகோதரியால் சகோதரன் கொலை!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள களுத்துறை – பண்டாரகம, அத்துலுகம பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி பிரச்சினையால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரது சகோதரியே இந்த கொலையை செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூரிய ஆயுதமொன்றினால் தனது சகோதரனை குத்தி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் 31 வயதான ஒருவரே அவரது 33 வயதுடைய சகோதரியால் கொல்லப்பட்டுள்ளார். கொரோனா அச்ச நிலை காணரமாக இன்றைய தினமே (07) சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றனர். சடலத்திற்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை