வைத்தியர்களின் போராட்டம் நிறுத்தம்!


 “வைத்தியர் கணேசமூர்த்தியை யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததைடுத்து நாம் எமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஒருவாரகாலத்திற்கு ஒத்திவைக்கின்றோம். மத்திய சுகாதார அமைச்சிலிருந்து கடிதம் கிடைக்காத பட்சத்தில் எமது போராட்டம் 15ம் திகதி 24 மணிநேர போராட்டமாக விஸ்தரிக்கப்படும்”

இவ்வாறு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (08) நடைபெற்ற பணிப்புறக்கணிப்புத் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.