அனைவரையும் ஈர்த்த இலங்கை கொத்து ரொட்டி!
வியட்நாமிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச உணவு விழா வியட்நாம் – ஹெனோயில் மிக விமர்சையாக நடைபெற்றுள்ளது.
இலங்கையின் உணவு வகைகளை வியட்நாம் பிரஜைகள் மிகவும் விரும்பி உட்கொண்டதுடன், கொத்து ரொட்டி மற்றும் அப்பம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த உணவு விழாவில் சுமார் 1500ற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, 115 உணவு விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விழாவில் இராஜதந்திர தூதுக்குழுக்கள், சர்வதேச அமைப்புக்கள், ஹெனோயிலுள்ள அரச சார்ப்பற்ற அமைப்புக்கள், வியட்நாம் வெளிவிவகார அமைச்சு, மாகாண ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை