வைத்தியசாலை விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!
நேற்று (04) இரவு முதல் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சேவை வழங்கப்படுகின்றது என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் சரியான வடிகாலமைப்பு வசதியின்மையால் இவ்வாறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை