அன்ரிஜென் பரிசோதனை முடிவு உத்தரவாதமற்றது!


 விரைவான அன்ரிஜென் கருவி மூலமான கொரோனா பரிசோதனை முடிவுகள் உத்தரவாதமற்றது என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

“அன்ரிஜென் பரிசோதனை மூலம எவராவது கொரோனா தொற்று இல்லை என்ற முடிவை பெற்றால், அது தெளிவான முடிவு என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியாது.

இந்த அன்ரிஜென் பரிசோதனை செய்வதன் ஊடாக உங்களுக்கு தொற்று இல்லை என்று 100 வீதம் உத்தரவாதமளிக்க முடியாது. இப்போது தொற்று இல்லை என்ற முடிவை பெறுபவர் சில நாட்களில் தொற்று உள்ளது என்ற முடிவை பெறக்கூடிய நிலைமை உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.