ஆசிரியர் போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டது!


 கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்குரிய போட்டிப் பரீட்சை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக அப்பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை சலீம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.