முல்லைத்தீவும் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வீதி போக்குவரத்துக்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை புரேவி புயலின் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவில் துறை சார் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை