சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் விபரம்!
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று (9) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். அவர்கள் பயணம் செய்ய காரின் ரயர் காற்று போனதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கியில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் ஆன் டேரோளினி (30), யோகதாஸ் மகிழன் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆன் மக்கிலியோட் (6) என்ற சிறுவன் தலைக் காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேபோனியா, கரோலின் (35) என்ற பெண்கள்
காயம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை