கனடாவில் நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா!


 கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கொரோனா தொற்றால் கனடாவில் மூன்று இலட்சத்து 96ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 12ஆயிரத்து 407பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 495பேர் பாதிக்கப்பட்டதோடு, 82பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 69ஆயிரத்து 255பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மூன்று இலட்சத்து 14ஆயிரத்து 608பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.