யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்ற கஞ்சா!
யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சாவை கடத்திய இருவர் மட்டக்களப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வைத்து குறித்த காரை மடக்கிபிடித்துள்ளனர்.
இதன்போது காரில் சூட்சகமாக மறைத்துவைக்கப்பட்ட நிலையில், 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவையும் கார் ஒன்றையும் பொலிஸ் குழுவினர் மீட்டுள்ளனர்.
கைதானோர், பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை