தேயிலை தொழிற்சாலையில் பாரிய தீ!


 இரத்தினபுரி – பலாங்கொடை, ஒலுகங்தொட்ட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று (28) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவலினால் பெருமளவிலான தேயிலை கொழுந்துகள் மற்றும் தேயிலை தூள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர். தீயை பிரதேச மக்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.