மேற்கத்திய மருத்துவத்தில் போதை இல்லை!
மேற்கத்திய மருத்துவத்தில் போதைப் பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள், போதை மருந்துகளை உட்கொண்டதால் கட்டுக்கடங்காத முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். பொலிஸ் தரப்பால் மனநிலை சரியில்லாத நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் உட்கொண்டதால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறினார். மேலும்,
கைதிகளின் மரணங்களை மறைக்கும் முயற்சியில் இதுபோன்ற அப்பட்டமான பொய்கள் கூறப்படுகின்றன என்றும், குறித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை என குறிப்பிட்ட ராஜித, இதனை தேசிய மனநல நிலையமும் மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை