அவுஸ்திரேலியாவை தோற்கடித்து பழிதீர்த்தது இந்தியா!


 சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி பழிதீர்த்துள்ளது.

இதன்படி 26ம் திகதி ஆரம்பித்த 2வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சிறப்பித்த இந்திய அணி 8 விக்கெட்களினால் அபார வெற்றியை பெற்று, தொடரையும் சமப்படுத்தியுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றிருந்தனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3) விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஜிங்கியா ரஹானே (112), ரவீந்திர ஜடேயா (57), சுப்மன் கில் (45) ஓட்டங்களை பெற்றுதவினர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்ராக் (78/3), நதன் லயன் (72/3), பட் கம்மின்ஸ் (80/2) விக்கெட்களை வீழ்த்தினர்.

போட்டியின் 4ம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றியிலக்கை நிர்ணயிக்க ஆடிய அவுஸ்திரேலிய அணி கடந்த இன்னிங்ஸை விட ஐந்து மேலதிக ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் கமரோன் க்ரீன் (45), மத்தியூவ் வாட் (40) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் (37/3), ரவிச்சந்திரன் அஸ்வின் (71/2), ஜஸ்பிரித் பும்ரா (54/2), ரவீந்திர ஜடேயா (28/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய இந்தியா 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் (35*), அஜிங்கியா ரஹானே (27*) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்ராக், பட் கம்மின்ஸ் ஆகியோர் முறையே (20/1 – 22/1) விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். போட்டியின் நாயகனாக 226 ஓட்டங்களை பெற்ற ரஹானே தெரிவாகினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.