மெனிங் சந்தை வர்த்தகர்கள் உண்ணாவிரதம்!
பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் இன்று (11) சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பேலியகொட மெனிங் சந்தையின் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரி, கொழும்பு -கோட்டையில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆனாலும், நேற்று பிற்பகல் வரை குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்காதமையினால் அவர்கள், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை இன்று முன்னெடுத்துள்ளனர்.
எமது பிரச்சினைகளுக்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் கலந்துரையாட தவறினால், நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், குறித்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை