சொக்லேற் கனவுகள் 6- கோபிகை!!

 


கைகளை உயரத்தூக்கி 

சோம்பல் முறித்தபடி 

எழுந்து கொண்டான் 

ஆதித்தன். 

இன்று கனிகாவின் 

அகவை நாளாச்சே,

உள்ளுக்குள் குமிழியிட்டது

சந்தோசச் சாரல்கள்....


அவனது வாழ்வில்

இறுதிவரை துணையாக 

இன்ப துன்பத்தின் பாதியாக

வரப்போகிறவள்,


அவள் உதித்த நாளை

உன்னதமாய் கொண்டாட

எண்ணியவன்,  

நள்ளிரவிலேயே

நல்வாழ்த்தைப் 

பகிர்ந்திருந்தான்.


இதுநாள் வரை 

அவனுடைய வாழ்வில்

மிக முக்கியமான

மிக விஷேசமான

பிறந்தநாள் என்றால்

அனுதியினுடையது 

மட்டும்தான். 


அப்பா, அம்மா,

மாமா, அத்தை

பெரியப்பா, பெரியம்மா,

அண்ணன்கோவர்த்தன்

இப்படி பலபேருக்கு

பிறந்தநாள் வந்தாலும்

அனுதிக்கு மட்டும் 

தனியிடம்  தான்.


இது வரை கனிகாவை

அவன் தனியே 

சந்தித்ததில்லை.

அவளது பார்வையில் 

அவளுக்கும் பிடிக்கும்

என்பதை மட்டும்

உணர்ந்திருக்கிறான், 


'எங்கே சந்திப்பதென?'

அவள் கேட்டதற்கு,

'கோவிலில் சந்திக்கலாம்' என

பதில் அனுப்பிவிட்டு,

அவசரமாய் விரைந்தான்

அத்தை வீட்டிற்கு. 


மணி ஏழைக் கடந்தும் 

படுக்கையில் உருண்ட

அனுதியை, 

வெளியில் கேட்ட 

ஆதித்தனின் பேச்சொலி

விழிக்கச் செய்தது. 


'அத்தை, அனகொண்டாவை

எழுப்பிவிட்டு வாறன்,

எனக்கும் ரீ போடுங்கள்'

சொல்லிவிட்டு 

உள்ளே விரைந்தான். 


'இவ்வளவு நேரமா

தூங்குவாய்? 

எழும்புடி அனகொண்டா?'

அவன் சொல்ல, 


'ஒட்டகச்சிவிங்கி, 

உன்னுடைய ஆளுக்கு 

பிறந்தநாள் என்றதும்

ரொம்பத்தான் ஆட்டம்,

கதையைப் பார்,' 

அவள் கோபமாய் சீற,


'ஏய்..ஏய்...அனகொண்டா,

எட்டு மணிக்கெல்லாம்

கோயிலுக்கு வரச்சொல்லிட்டா,

எழும்புடி போகலாம்,'

அவன் உலுக்க, 

'எனக்கு தெரியாது, 

நான் வரலை

நீ போயிட்டு வா...

அவள் திரும்பிப் 

படுத்துக்கொண்டாள். 


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.