சொக்லேற் கனவுகள்.......7- கோபிகை!!
'ஏய்....முடிவா நீ
என்னதான் சொல்றாய்?'
அதட்டிய ஆதித்தனை,
முறைப்பாய் பார்த்த
அனுதி,
'நான் வரமாட்டன்,
வரமாட்டன், வரமாட்டன்....'
என பாட்டாய் பாட,
மிகப் பாவமாய்
முகத்தை வைத்தவன்
'சரி விடு, நானும் போகலை,'
என்றான் அமைதியாய்.
'என்னடா சொல்றாய்?'
'நீ ஏன்டா போகலை?'
அவசரமாய்
எழுந்து அமர்ந்தவள்,
'உங்களுக்கிடையில
நான் எதுக்குடா,
நத்திமாதிரி' என்றாள்.
'என்னடி சொன்னாய்?
நந்தி மாதிரியா?'
'என் வாழ்க்கையில
நீ இல்லாம என்னடி
நடந்திருக்கு, சொல்லு?'
என்றான் ஆற்றாமையுடன்.....
'அதுக்கில்லைடா ஆதி,
இதுவரை நிலைமை வேற,
இது வேற இல்லையா?'
என்றாள்.
'எதுவா இருந்தாலும்
என் வாழ்க்கையில
எல்லாமே'
அவள் விழிகளை
இன்னும் ஆழமாய்
பார்த்தவன்
'எல்லாமே' என்றதில்
இன்னும் சற்றே
அழுத்தம் கொடுத்தான்.
'எல்லாமே..' என
அவசரமாய் ஆனால்
நிதானமாய்
அனுதி கேட்க,
'எல்லாமே நீ
எடுக்கிற முடிவாதான்
இருக்கவேணும்'
சொல்லிவிட்டு
அங்கிருந்து அகன்றான்.
கனவுகள் தொடரும்
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை