சொக்லேற் கனவுகள் 2 - கோபிகை!!
'சைக்கிள் ஓட
சொல்லிக் கொடுத்தவனே
நான் தான்,
எனக்கே சைக்கிள்
ஓடிக்காட்டுவியா'
வெளியே கோப்பட்டாலும்
உள்ளுக்குள் சிரிப்பான்
அவன்....
ஒரே காணியில்
நான்கு வீடுகள்,
அக்கம் பக்கம் உறவுகள்,
ஊரில் அனைவரும்
தெரிந்தவர்களே.....
ஒரு வீட்டில் வலியென்றால்
நான்கு வீட்டிலும்
கண்ணீர் வரும்,
ஒரு வீட்டு சமையல்
ஐந்து வீட்டிற்கும்
உலாப் போகும்.....
'ஐயே....எப்ப பார்,
இடியப்பம் சொதிதான்....
எனக்கு வேண்டாம்,'
அலுத்துக் கொள்வாள்
அனுதி,
'உனக்கு யார் சமைச்சது,
என் மருமகன் வருவான்,
அவன் வந்து சாப்பிடுவான்,
நீ போடி....'.
தாய்க்கும் மகளுக்கும்
வாய் யுத்தம் நீளும்,
'அனுதிம்மா.....
அத்தை கூப்பிட்டாளே,
போயேன்....என்னன்று கேள்,'
இடையே புகுந்துகொள்வார்
அனுதியின் அப்பா சுதாகர்.....
'நல்ல சமாளிப்பு....
எப்ப பார் மகளுக்கே
சப்போட் பண்ணுங்கோ,'
அலுத்துக் கொள்ளும்
மனைவியிடம்,
'இப்ப என்ன,
தோப்புக்கரணம் போடணுமா,
எண்ணிக்கொள்,'
என்னும் கணவனுக்கு
புன்னகையை பதிலாக்கிவிட்டு
வாசலுக்கு விரைவார்,
அனுதியின் அம்மா சகுந்தலா.
'ஏய்....இடியப்பம்,
உன் அத்தை அங்க
உனக்காக வெயிற்றிங்டா'
உதடு சுழித்தபடி
சொல்வாள் அனுதி..
அத்தையை ஏமாற்றாமல்
அவசரமாய் வந்து நிற்பான்
அவருடைய அன்பு மருமகன்
ஆதித்தன்....
'வா..வா..வா.....வாப்பா...
நீ வந்தாதான்டா
உன் அத்தை எனக்கே
உண்ண கொடுப்பா.....'
'அடடே...நடிக்காதீங்க.....
அவன் சாப்பிடட்டும்....'
அத்தை அதட்டும் அழகில்
அடங்கிவிடும் மாமனாரை
சிரித்தபடி பார்ப்பான் ஆதி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை