இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

 


நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் மொத்த பாதிப்பு 26ஆயிரத்து 816ஆகப் பதிவாகியுள்ளது.


இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 375ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 461 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 22 ஆயிரத்து 261 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 970 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 144 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.